பொத்துவில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் பிரதேச செயலாளர், ஊழியரை
தாக்கிய நபரை கைது செய்யுமாறு கோரி பொத்துவில் பிரதேச செயலக
ஊழியர்கள்,மற்றும் பொத்துவில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து (27)
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு முன்னாள் பாரிய வீதி மறியல் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
வியாழக்கிழமை (26) பொத்துவில் பிரதேச செயலகத்தில் 100 நாள்
வேலைத்திட்டத்தில் தீர்க்கப்படாமல் இருந்த பொத்துவில் கிரான்கோவை,
பொத்துவில் பிரதேச காணிப் பிரச்சினை சம்பந்தமான கூட்டம் பொத்துவில் பிரதேச
செயலாளர் தலைமையில், கிழக்கு மாகாண காணி ஆனையாளர், உதவி ஆணையாளர் ,அம்பாரை
நில அதிகாரி, பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பொழுதே பிரதேச அரசியல் நபர்
ஒருவரான அன்வர் சாதாத் என்பவரால் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத்,
மற்றும் ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக பிரதேச செயலாளர் பொலிஸ் நிலையத்துக்கு
அறிவித்தும் பொத்துவில் பொலிஸ் திணைக்களத்தினால் குறித்த நபரை இதுவரை கைது
செய்யவில்லை. இதனைக் கருத்திற் கொண்டு பொதுமக்கள், பிரதேச செயலக ஊழியர்கள்
வீதி மறியல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதி மறியல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் பொத்துவில் பொலிசே
அடாவடித்தனம் செய்தவனை கைது செய், அரச அலுவலகங்களில் அடாவடித்தனத்தில்
ஈடுபடுவோரை கைது செய், போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி நிலவும் இத்தருணத்தில் அரச அலுவல ஊழியர்களை தொடர்ந்து தாக்கி
வரும் குறித்த நபர் கைது செய்யப்படுவாரா? என மக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment