21 Feb 2015

மட்டக்களப்பில் விளையாட்டில் ஊக்கமருந்து பதார்த்த பயன்பாட்டை தடுப்பது தொடர்பான செயலமர்வு

SHARE
விளையாட்டுத் துறையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பதார்த்தங்களின் பயன்பாட்டினைத் தடுத்தல் தொடர்பான செயலமர்வொன்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துத் தடுப்பு முகவரமைப்பினால் ((SLADA- sri lanka anti doping agency)) மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் பிரிவினருடன் இணைந்து இந்த செயலமர்வு நடத்தப்பட்டது.

இலங்கையின் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துத் தடுப்பு முகவரமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சீவலி ஜயவிக்கிரம இச் செயலமர்வில் விளக்கங்களை வழங்கினார். மாவட்டததிலுள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகளும் இச் செயலமர்வில் பங்கு கொண்டனர்.

இந்தச் செயலமர்வில், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் தொடர்பான அடிப்படையான விடயங்கள்,  இவற்றினைப் பாவிப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள், பாவனையில் ஈடுபடுபவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பாவனைகள் தொடர்பில் நடைபெற்ற முதலாவது செயலமர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில், மாவட்ட விளையாட்டுத்துறை இணைப்பாளர் வை.ஜீ.எம்.பாலித வணிகரத்ன, மாவட்ட விளையாட்டுத்துறைப் பயிற்றுவிப்பாளர் ரிசோமாஸ்கந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Anti drug-2

Anti drug-3
SHARE

Author: verified_user

0 Comments: