15 Feb 2015

நீரிழிவை வேரறுக்க நூல் வெளியீடு

SHARE
மட்டக்களப்பு-பெரியபோரதிவைச் சேர்ந்தவரும், பொலநறுவை பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் விசேடவைத்திய நிபுணர் முத்து முருகமூர்தி எழுதிய நீரிழிவை வேரறுக்க எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை (15) மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஞா.கிருஷ்ணபிள்ளை, கோ.கருணாகரம், மா.நடராசா, மற்றும், வைத்திய அதிகாரிகள், கல்வியியலாளர்கள், சமயத் தலைவர்கள், பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையினை வைத்தியர் வி.அருளாளந்தமும், நூலின் நயவுரையினை போரதீவுப்பற்று கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரனும் நிகழ்த்தினர்.

நூலின் முதற் பிரதியினை நூலாசிரியர் அவரின் தாயாருக்கு வழங்கி வைத்தார். 


































SHARE

Author: verified_user

0 Comments: