4 Feb 2015

கிழக்கில் 67வது சுதந்திர தின கொண்டாட்டம்

SHARE
இலங்கையின் 67வது சுதந்திர தினம் இன்றாகும். இதனையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வைபவங்கள் இடத்பெற்றன.

மாவட்டத்தின் பிரதான வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

வீடமைப்பு சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கீதம்கீதம் இசைக்கப்பட்டதுடன் சுதந்திரதின உரையும் இடம்பெற்றது.

சுதந்திர தினத்தையொட்டி மாவட்டத்தின் பல இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் சுதந்தி தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: