சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.45 மணியலவில் வீடொன்றின் மீது
சிறியரக கைக்குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாய்ந்தமருது அல்-ஹிலால் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம்;
மாணவர் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும் சாய்ந்தருது முஸ்லிம்
காங்கிரஸ் மத்திய குழுவின் உதவி செயலாளருமான வீ.எம்.ஆஷிக் என்பவரின்
வீட்டுக்கே இக்கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதல் மேற்கொண்ட சமயம் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள்;
எதுவித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். இத்தாக்குதலில்
வீட்டின் முன்புறக் கதவுகள் மற்றும் வீட்டுத் தளபாடங்கள்
சேதமாக்கப்ட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment