100 நாள் வேலைத்திட்டத்தின் இசை வேள்வி வேலைத்திட்டத்திற்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இசை வேள்வி நிகழ்ச்சி எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் பிற்பகல் 2 மணிமுதல் இந்த இசை நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச இசைக்குழு என்பன ஒன்றிணைந்து ஈடுபட்டுள்ளன.
இந்த நிகழ்வில், தேசிய ரீதியிலான கலைஞர்கள், உள்ளுர் கலைஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment