31 Jan 2015

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப்பணி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அண்மைய வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பூலாக்காடு கிராம சேவகர் பிரிவிலுள்ள 369 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பாய், போர்வை, சமையல்பாத்திரங்கள், குழந்தைகளுக்கான உடைகள், நுளம்புவலை, சுகாதார பொதிகள் என்பன மக்களின் தேவையின் அடிப்படையில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் வழங்கி நேற்று செவ்வாய்க் கிழமை (29) வைக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலாளர் பூ.தனபாலசுந்தரத்தின் வேண்டு கோளின்பேரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜாவின் நிவாரணப் பணி ஓழுங்கமைப்பின் கீழ் கிரான் பிரதேச அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எஸ்.சிற்றம்பலம்; கிராம சேவை உத்தியோகத்தர் வீ.ஜமுனானந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விவேகானந்தன், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ம.கந்தசாமி ஆகியோரின் உதவியுடன் இப்பொருட்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிவாரணப் பணியாளர்களான சீ.கஜேந்திரன், சி.நிவேசன், எஸ்.கமலேஸ்வரன் ஆகியோரினால் பகிர்தளிக்கப்பட்டது.

பூலாக்காடு கிராம சேவகர் பிரிவில் உள்ள ப+லாக்காடு, பொண்டுகள்சேனை, வட்டிபோட்டமடு, பெரியவேரம், சின்னவேரம், அம்புஸக்குடா, ஆனைசுட்ட பொத்தானை, அரசடிக்குடா, பிரம்படித்தீவு, முருக்கன்தீவு சாராவெளியில் போன்ற கிராமங்களில் வாழும் 369 குடும்பங்களுக்கே இந்நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: