(கமல்)
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தையில் திடீர்சோதனை நடவடிக்கை ஒன்று சுகாதார பரிசோதகர் குழு வொன்றினால் நேற்று சனிக் கிழமை (03) முன்னெடுக்கப்பட்டதனை அடுத்து ஏழு வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தலைமையிலான குழுவினரே இந்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
புதுவருடத்தினை வியாபாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே சந்தையில் பழுதடைந்த பொருட்கள் விற்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரமே இந் நடவடிக்கை மேற்கொண்டதாக தலைமை வகித்த சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
இதன்போது பாவனைக்கு உதவாத பழுதடைந்த, கெழுத்தி, வளையா, திருக்கை போன்ற 47 கிலோ மீன்கள் மூன்று வியாபாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது மற்றும் தொற்று உள்ள கோழி முட்டைகளும், நான்கு வியாபரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து இவர்களை நீதவான் நீதிமன்றில் அஜர்படுத்திய வேளை எதிர்வரும் 22 திகதி களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் ஆஜராக வேண்டும் எனவும் பொருட்களை உடன் எரிக்குமாறும் பதில் நீதிபதி வினோபா இந்திரன்; உத்தரவிட்டிருந்ததாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் மேலும் கூறினார்.

0 Comments:
Post a Comment