4 Jan 2015

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதைகளைக் கேட்டுக். கேட்டு எதிர் தரப்புக்கு வாக்களிப்பதனால் அபிவிருதிகள் நடைபெறுவது குறைவு - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா

SHARE
முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றதார்கள், அதன் காரணமாக முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அதிகளவு அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதைகளைக் கேட்டுக். கேட்டு எதிர் தரப்புக்கு வாக்களிப்பதனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அதிகளவு அபிவிருதிகள் நடைபெறுவது குறைவு இதுதான் உண்மை.

என பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மண்முனை தென்  எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேசத்திற்குட்பட்ட சுயதொழிலை மேற்கொண்டு வரும் 40 பயனானாளிகளுக்கு தலா 10000 ரூபாய் பெறுமதியான காசோலைகளை இன்று ஞாயிற்றுக் கிழமை (04) வழங்கி வைத்துவிட்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் தலைர் ஏ.சோதிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கின் இராமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்…….

அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர் பிரதேச அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது. அதனோடிணைந்த வகையில் மக்களுடைய வாழ்க்கையையும் அபிவிருத்தி செய்ய வேணடும் என்பதற்காக மக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வேண்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுயதொழில் வாயப்புக்கான வசதிகளை ஏற்பாடு செய்திருக்கின்றது.
 
இந்த வருடத்திலிருந்து எதிர் வரும் 3 ஆண்டுகளிலே ஒவ்வொரு குடும்பமும் எந்த தொழிலில் ஈடுபடுகின்றார்களோ அந்த தொழிலின் அடிப்படையில் அவர்களுக்குத் தோவையான பயிற்சிகளையும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

கடந்த யுத்தகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்திலே பல பிரச்சனைகள் இருக்கின்றன 35000 பேர் வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான விதவைகள் இருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நமது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாக இருந்தால் தீர்வைத் தரக்கூயடியவர்களோடு நாங்கள் போகவேண்டும். இதில் நாங்கள் அனைவரும் தெழிவாக இருக்க வேண்டும்.

எதிர் வருகின்ற 3 ஆண்டுகளில் ஜனாதிபதி இந்த நாட்டில் 5 லெட்சம் வீடுகளை அமைக்க நடடிக்கை எடுத்துள்ளார். நமது மாவட்டத்திற்கும் அதிகளவு வீடுகளைப் பெற்றுக் கொள்ளவேண்டுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்திலில் நீங்கள் யாருக்காவது வாக்களிக்கலாம், ஆனால் தற்போத வர இருப்பது ஜனாதிபதித் தேர்தல் இந்த தேர்தலில் நாங்கள் மட்டும் வாக்களித்து வெற்றியைத் தீர்மானிப்பது அல்ல முழு நாட்டு மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றியைத் தீர்மானிப்பதாகும்.
 
ரணில் விக்கிரமசிங்கவும், மஹிந்த ராஜபக்ஸவும் கடந்த காலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது அதில் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைந்து மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெறறார்.

அதுபோல் கடந்த ஜனாதிபதித் தேத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், உட்பட பலர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் வாக்களித்தும் சரத் பொன்சேகா படுதோல்வியடைந்து 19 லெட்சம் வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றார்.

இந்த முறை மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஸவும பிரதான வேட்பாளர்களாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். வழக்கம் போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா மஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிக்கின்றார்கள். ஆனால் மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது, அவர் வெற்றியை கனவிலும் நினைக்கமுடியாது. மாறாக இறைவனுடைய நாட்டப்படி 9 ஆம் திகதி லெட்டக்கணகாகன வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார்.

எமது பகுதியில் பல பிரச்சனைகள் காணப்படுகின்றன இந்த பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகமான அமைதி மட்டுமே தவிர நிரந்தர அமைதியல்ல எனவே நரந்தர அமைதி வேண்டுமாக இருந்தால் நமக்குத் தெரியாத ஒருவரிடம்போய் தீர்வைக் கேட்க முடியாது. எனவே நம்மை நன்கறிந்த மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து அவரிடமிருந்து நிரந்தர சமாதமானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்கின்றதார்கள், அதன் காரணமாக முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் அதிகளவு அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதைகளைக் கேட்டுக். கேட்டு எதிர் தரப்புக்கு வாக்களிப்பதனால் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அதிகளவு அபிவிருதிகள் நடைபெறுவது குறைவு. இதுதான் உண்மை.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவருடைய சொந்தப் பிரச்சைனையின் காரணமாகத்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளார். எந்த விதமான பொது பிரச்சனைகளும் அவருக்குக் கிடையாது. எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும். வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவார் அவருடைய வெற்றியில் நாங்களும் பங்காளர்களாக மாறவேண்டும்.

எங்கள் யாராலும் மஹிந்த ராஜபக்ஸவை தேற்கடிக்க முடியாது, எதிர் வரும்  9 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன படுதோல்வியடைந்து வீதியில் நிற்கப்போகின்றார். என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு 25 கதிரைகளும் ஒரு லெட்சம் ரூபாய் பெறுமதியான கொட்டகை ஒன்றும் பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: