16 Jan 2015

தகவல், ஊடகத்துறை புதிய அமைச்சர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்

SHARE
புதிய அமைச்சரவையின் தகவல் ஊடகத்துறை அமைச்சராக கயந்த கருணாதிலக (16ஆம் திகதி) இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அமைச்சு விஜயம் செய்ய அமைச்சர் கயந்த கருணாதிலக்கை அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதான ,மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரங்கே பண்டார உட்பட அமைச்சர்கள் ,பிரமுகர்கள் ஆகியோருடன் அமைச்சரின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையானோரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லையும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு புதிய அமைச்சரை வாழ்த்தினார்.

அமைச்சர் கயந்த கருணாதிலக, பல வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக பேச்சாளராக கடமையாற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இவர், 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

மீண்டும் 2001, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாதிலக, ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணிக்கு தலைமை தாங்கி செயல்பட்டார்.இவர் கொழும்பு றோயல் கல்லூயின் பழைய மாணவராவார்.



Minister Gayantha

Minister Gayantha-2
Minister Gayantha-3
SHARE

Author: verified_user

0 Comments: