13 Jan 2015

நாட்டின் ஜனாதிபதிக்கு பான்கீமூன் வாழ்த்து தெரிவிப்பு

SHARE
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியினூடாக பான் கீ மூன் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இலங்கையின் முன்னேற்றம், நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பான் கீ மூன் ஜனாதிபதியிடம் மேலும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மற்றும் செயலாளர் நாயகத்துக்கிடையில் இலங்கையின் போரின் பின்னரான நிலையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: