நியூஸிலாந்தின்
தென்தீவில் இன்று (06) செவ்வாய்க்கிழமை காலை பாரிய பூமியதிர்ச்சி
ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அதிகாரிகள் அபாய எச்சரிக்கை
விடுத்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில்
6.0 ஆக பதிவாகியுள்ளது. கிறிஸ்சேர்ச்சின் மேற்குப்பகுதியிலிருந்து சுமார்
100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆர்தூர் பாஸ் பகுதிக்கு அருகில் இந்த
பூமியதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. இந்த பூமியதிர்ச்சியில் காயமடைந்தவர்கள்
பற்றிய விபரங்களோ அல்லது சேத விபரங்கள் பற்றியோ உடனடியாக தெரியவரவில்லை
எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 185 பேர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
அத்துடன் கடந்த 2011ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 185 பேர் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
0 Comments:
Post a Comment