இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டனில்
நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை
அடைந்துள்ளது.
அதன்படி இப்போட்டி நிறைவடைய இன்றும் ஒருநாள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணிக்கு 390 என்ற வெற்றியிலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 221 ஓட்டங்களையும் இலங்கை 356 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 524 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. நியூசிலாந்து அணி சார்பில் கே.எஸ்.வில்லியம்சன் ஆட்டமிழக்காது 242 ஓட்டங்களையும் வெட்லிங் ஆட்டமிழக்காது 142 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து 6வது விக்கெட் இணைப்பாட்டத்திற்கு 365 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளனர். நியூசிலாந்து அணியின் மெக்கலம் மற்றும் வெட்லிங் ஆகியோர் ஆறாவது விக்கெட் இணைப்பாட்டத்திற்கு 352 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது.
இலங்கை அணி தற்போது ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடி வருகிறது.(ad)

0 Comments:
Post a Comment