1 Feb 2015

வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை

SHARE
கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் கட்டிடங்கள் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த இரும்புகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன, அதற்கு தனது அமைச்சின் உயர் அதிகாரிகளைக் கொண்ட விசாரனை குழு ஒன்று ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளின் பெயரில் சனிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர், கடதாசி ஆலையை பார்வையிட்டதுடன், ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மிகவும் பிரபல்யமாக விளங்கிய வாழைச்சேனை கடதாசி ஆலையை இந்தளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இங்குள்ள சொத்துக்களை கொள்ளையிடுவதற்கும் யாரெல்லாம் உடைந்தையாக இருந்தார்களோ அவர்களுக்கு எதிராக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுத்து அதற்குரிய தண்டணையை பெற்றுக் கொடுப்பேன்.

அரச சொத்து இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழிற்சாலை, நான்காயிரம் ஐயாயிரம் பேர் தொழில் செய்யும் தொழிற்சாலை, இதை பாதுகாப்பதற்கு நியமிக்கப்பட்டவர்களாலயே இந்த ஆலை நாசமாக்கப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் கவலையாகவுள்ளது.

மஹிந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்களை இல்லாமல் செய்வதற்காகத்தான் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் மைத்திரிபால சிறிசேன ஒரு நேர்மையான ஜனாதிபதி நல்லாட்சியை கொண்டு வருவதற்காக வந்துள்ளார்.

அவருடைய அரசாங்கத்தில் இதற்குரிய பொறுப்பை எனக்கு தந்துள்ளார். எனவே இது என்னுடைய அமைச்சுக்கு கீழ் வந்துள்ளது இதனை எவ்வாறு இலாபகரமாக இயங்க வைக்கலாம், எவ்வாறு தொழிலாளர்களுக்கு இலாபம் வழங்கி, எவ்வாறு சந்தோசப்படுத்தலாம் என்ற விடயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

பிரதி அமைச்சர் அமீர் அலி இந்த ஆலையைப் பற்றி அடிக்கடி என்னிடம் கவலைப்படுவார் தொழிற்சாலையை முன்னேற்ற வேண்டும் இலாபகரமாக இயங்க வைக்க வேண்டும், தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும் என விடயத்தில் மிகவும் அக்கறையாக உள்ளார்.

இங்கு கடமை புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் நியக்கப்படும் விசாரனைக்குழுவிடம் கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களை எல்லாம் மறைக்காமல் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் அப்போது தான் ஆலையின் பெயரால் நடாத்தப்பட்ட ஊழல்களை வெளிக் கொண்டுவர முடியும்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமை புரிந்த பொறியியலாளர்கள், உத்தியோகத்தர்கள் எல்லோருக்கும் நான் தற்போது அழைப்பு விடுக்கின்றேன். ஆலையின் வளர்ச்சியை கருத்திற் கொண்டு தற்காலிகமாக வந்து இந்த தொழிற்சாலையை எவ்வாறு மீளக் கட்டியமைக்கலாம், இதை எவ்வாறு முன்னேற்றலாம் இதற்கு நாங்கள் என்ன என்ன விடயங்கள் செய்ய வேண்டும் என்று தங்களுடைய ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

வேலைகள் இடம்பெற்றால் சம்பளம் வழங்க முன்னெடுத்துச் செல்லாம். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய அமைச்சர் நான் வந்திருக்கின்றேன். அதனால் தற்காலிமாக நான் தங்களிடம் வேண்டிக் கொள்வது தொழிற்சாலைய முன்னேற்றி நடாத்திச் செல்வதற்குரிய வேலைகளை செய்வதற்கு கலந்துரையாடவுள்ளோம்.

அத்தோடு தங்களுக்கு இதுவரை என்ன என்ன கிடைக்கவில்லையோ அதனை அமைச்சரவையில் பத்திரத்தை போட்டு, இங்கு நடைபெற்ற ஊழல்கள் என்பவற்றையும், களவு செய்யப்பட்ட பொருட்களையும் உரியவர்களிடம் இருந்து பறிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார்.

இந்த விஜயத்தின் போது பிரதி அமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி, கடதாசி ஆலையின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: