இஸ்லாமிய வரம்புக்குள் நின்று அமைச்சராக வரக்கூடிய அனைத்து தகுதிகளும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷpப்லி பாறுக்குக்கு உள்ளது. எனவே அவரை
பலப்படுத்த வேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் உள்ளது இவ்வாறு கைத்தொழில்
வர்த்தக வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான
றிசாட் பதியுத்தீன் தெரிவித்தார்
நேற்று காத்தான்குடியில் ஐனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றமைக்காகவும்
அமைச்சர்களை வரவேற்பதற்குமான மாகாண சபை ஷpப்லி பாறுக்கினால்; ஒழுங்கு
செய்யப்பட்ட கூட்டம் காத்தான்குடி கடற்கரை ஹாஐpயார் வளவில் இடம்பெற்றது.
இதன்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஹமீட் மற்றும் பெரும்திறளானோர்
கலந்துகொண்டனர்
அமைச்சர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த தேர்தலில் ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெற்றியீட்டியது எமது
சமூகத்திற்கு அதாவது 20 லட்சம் முஸ்லிம்களுக்கு கிடைத்த பாரிய
வெற்றியாகும்
கடந்த ஆட்சியில் எங்களுக்கு தேசியப்பட்டியல் தருவதாக கூறி இழுத்தடிப்புச்
செய்தார்கள் ஐனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சகோதரர் அமீர் அலிக்கு சகோதரர்
அஸ்வரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்தனர். பிரதியமைச்சும் தருவதாக
மகிந்தவின் அரசால் கூறப்பட்டது ஆனால் அதைபெறவில்லை அந்த சூழ்நிலையில்தான்
சமூகத்திற்கு எதிரான அநீதிகளை எடுத்துக் கூறி கட்சி தீர்மானத்திற்கமைய
வெளியேறினோம். புல அச்சுறுத்தல்களை சந்தித்தோம் உயிர் போனாலும் பரவாயில்லை
மைத்திரிபாலவுடன் இருப்போம் எனத் தீர்மானித்தோம்
அதே கொள்கையுடன்தான் ஷpப்லி பாறுக் மைத்திரி பக்கம் மாறினார். அவரின்
துணிச்சலை அவரின் இஸ்லாமிய நடைமுறைகளை அவர் சமூகத்திற்காக செய்த சேவைகளை
இத்தருணத்தில் பாராட்டுகிறேன். எதிர்வரும் கட்சி தீர்மானத்தின் போது
அவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவர் பதவி கொடுக்கத்
தீர்மாணித்துள்ளோம் அத்தோடு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அவரை
போட்டியிடச் செய்யவுள்ளோம்
சகோதரர் ஹிஸ்புள்ளாவுக்கு மைத்திரியுடன் சேருமாறு அழைப்பு விடுத்தோம்
சமூகத்திற்காக ஒன்றுபடுவோம் என்று கூறினோம். ஆனால் அவர் ஏற்கவில்லை
மகிந்தவைத்தான் வெல்லவைப்பதாக கூறினார். அவருக்கு முதலமைச்சர்
பெற்றுக்கொடுக்க இந்த கட்சிதான் பாடுபட்டது அவருக்கு பொருளாதார அபிவிருத்தி
பிரதியமைச்சர் பதவி பெற்றக்கொடுத்து இக்கட்சி அழகு பார்த்தது 9250 கோடி
ரூபாய் இந்த வருடம் மகிந்த ராஐபக்ஷ செலவளிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
ஐனாதிபதி மைத்திரி சொன்னார் 9000 கோடி வேண்டாம் 250 கோடி போதும் எனக்கூறி
மக்களின் பொருட்களுக்கான விலையை குறைக்கவும் அரச ஊழியர்களுக்கான
சம்பளத்தினை அதிகரிக்குமாறும் கூறினார். இது வரலாற்றில் பதியப்பட வேண்டிய
ஒரு விடயமாகும்
நல்லாட்சிக்காக இஸ்லாத்திற்காக சமூகத்தினை பாதுகாப்பதற்காக அல்லாஹ்விடம் கேட்ட துஆக்கள் வீண் போகவில்லை எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment