தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டாயாவில் 10 பவுண்ட் (சுமார் ஆயிரம்
ரூபாய்) பணத்துக்காக இங்குள்ள முதலைப் பண்ணையில் வேலை செய்யும்
பழக்குனர்கள் (பயிற்சியாளர்கள்) முதலையின் வாய்க்குள் தலையை விட்டு
தினந்தோறும் சாகசம் புரிந்து வருகின்றனர்.
கரணம் தப்பினால் மரணம் என்பது கழைகூத்தாடிகளுக்கு பொருந்தும். ஆனால்,
இங்கு முதலை தாடையை மூடினால் மரணம் என்னும் நிலையில், எதிரே நிற்கும் ஒரு
பெண் சிறிய மூங்கில் கம்பை வைத்து முதலைக்கு வேடிக்கை காட்டுகிறார்.
சற்று ஆசுவாசமான ‘மூடில்’ அது வாயை விரியத் திறந்து வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும் வேளையில், மெல்ல நெருங்கி, அதன் மூக்கின் மீது பட்டு
விடாமல் தங்களது தலையை முதலையின் வாய்க்குள் செலுத்தும் இவர்கள்
பார்வையாளர்களின் கரவொலியை பெறுவதுடன் அவர்களை பீதி அடையவும் வைக்கின்றனர்.
இரையை ஆவேசமாக கவ்வுவதற்காக ஒரு முறை வேகமாக வாயை மூடும் வேளையில் ஒரு
சதுர அங்குலம் பரப்பளவு கொண்ட முதலையின் வாய்ப்பகுதியில் சுமார் 1600 கிலோ
அழுத்தம் ஏற்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப்பற்றி எல்லாம்
பயமோ, கவலையோப்படாமல் இங்குள்ள ஆண்-பெண் பழக்குனர்கள் அன்றாடம் இந்த சாகசக்
காட்சிகளை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment