19 Jan 2015

இலங்கை விமானச்சேவையின் மத்தள விமான நிலையத்துக்கான பயணம் இடைநிறுத்தம்

SHARE
இலங்கை விமானச்சேவை மத்தள விமான நிலையத்துக்கான அதன் பயணத்தை கடந்த சனிக்கிழமை முதல் நிறுத்திக்கொண்டதாக அறிவிக்கின்றது. 

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கை விமானச்சேவையின் புதிய முகாமைத்துவம் பொருளாதார ரீதியில் பயனளிக்காத விமான சேவைகளை நிறுத்தி விட தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையிலேயே இலங்கை விமானச்சேவையின் மத்தள விமான நிலையத்துக்கான பயணம் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: