5 Jan 2015

வடகிழக்கு தமிழர்களும் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் கட்டாயம் வாக்களிக்கவேண்டும்

SHARE
இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதனடிப்படையில் இலங்கைத்தீவிலே அதுவும் குறிப்பாக வடகிழக்கில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழரிக்கட்சியின் இளைஞரணி தலைவர்கள் அவசர அழைப்பினை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசிக்க்டசியின் இளைஞரணித்தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோன் விடுத்துள்ள அறிக்கையில்.

இன்று எம்மிடம் எஞ்சியிருப்பது வாக்குப்பலமே தவிர வேறொன்றும் இல்லை அவ்வாரான வாக்குப்பலத்தினை காலத்தின் தேவை கருதி பயன்படுத்த வேண்டியது தமிழனாக பிறந்த ஒவ்வொருவனுடைய கட்டாய கடமையாகும் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த நாட்டிலே எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருககும் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் பெறுமதியினை இந்த பேரினவாதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்போதூன்எமது பலம் என்னஎன்று அவர்களுக்கு புரியும்.

ஏனனில் இந்த நாட்டில் உள்ள  தமிழர்களது வாக்கு எங்களுக்கு தேவையில்லை அது இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என மேடைகளிலே முழங்குகின்றார்கள் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமாக இருந்தால் நிட்சயம் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் இம்முறை வாக்களிக்கவேண்டும் அதன்மூலம் நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.

அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர்களது பலம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் உணர்ந்து எங்களது பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கதயாராகும் இதற்கு சர்வதேசமும் எமக்கு உந்து சக்தியாக இருக்கும்.

எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி எமது  தலமையின் தீர்க்க தரிசனமான வழிகாட்டலுக்கு அமைவாக கட்டாயமாக வாக்குச்சாவடிக்குச்சென்று வாக்களித்து தமிழர் பலத்தினை நிருபிப்பதன் மூலம் தன்மானத்தமிழர்களது பலம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பேரினவாதக்கட்சிகள் உணர்ந்து எமக்கான தீர்வினை தருவதற்கு முன்வரவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: