8 Jan 2015

இந்த தேர்தலில் நிட்சயம் எமக்கு வெற்றி - ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாண்க்கியன் இராசமாணிக்கம்

SHARE

இன்று நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சுமுகமான முறையில் நடைபெறுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பு மாடத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலுள்ள 100 வாக்களிப்பு நிலையங்களிலும் பொதுமக்கள் காலை 7 மணிமுதல் தமது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். நிட்சயம் இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ வெற்றி பெறுவார்.

என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாண்க்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இன்று (08) காலை மட்.பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களைவிட பட்டிருப்புத் தொகுதி மக்கள் விழிப்படைந்துள்ளனர் அதனடிப்படையில்தான் பட்டிருப்பு தொகுதியில் அமைந்துள்ள 100 வாக்களிப்பு நிலையங்களிற்கும் அதிகளவு மக்கள் விருப்பத்துடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி  மஹிந்த ரஜபக்ஸ வெற்றிபெற்றதும் மக்கள் வெற்றியினைக கண்டு உணர்ச்சிவசப்படாமல் அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் இந்தசந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன். என அவர் மேலும் கூறினார்.










SHARE

Author: verified_user

0 Comments: