இலங்கை
அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில்
மிகவும் போராட்டமான சூழலில் நியூசிலாந்து அணி இலங்கையணியை மூன்று
விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று (11) கிறைஸ்சேர்ச்சில் இடம்பெற்ற
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்
துடுப்பெடுத்தாடியது. இடம்பெற்ற போட்டியில் குறைந்த ஓட்டங்களைப் பெற்றதுடன்
முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து
தடுமாறியது.
23 ஓவர்கள் முடிவில் 82 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தொடர்ந்து களத்திலறங்கிய அனுபவ வீரர் மஹேல ஜயவர்தன மாத்திரம் ஒருமுனையில் சிறப்பாக ஆடி தனது 18 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். 107 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 12 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 104 ஓட்டங்களை பெற்றார்.
மஹேல ஜயவர்த்தன அதிக ஓட்டங்களைப் பெற்ற போதும் மற்றைய வீரர்களின் அதிகுறைவான ஓட்டங்கள் இலங்கையணியை தோல்விக்கே இட்டுச் சென்றது. எனவே இடம்பெற்ற நியூசிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 7 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1 - 0 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது.

திரிமான்ன மற்றும் ஜவன்த மெண்டிஸ் தலா 23
ஓட்டங்களையும், அணித்தலைவர் மத்தியூசினால் 15 ஓட்டங்களை பெற முடிந்ததோடு
சங்கக்கார 4 ஓட்டங் களையே பெற்றார். இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில்
9 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களையே பெற்றது.
நியூசிலாந்து சார்பில் மெக்லகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அடம் மில்னே 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் 219 வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி 101 ஓட்டங்களை பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் மத்திய வரிசையில் வந்த கொர்ரி அண்டர்ஸன் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். சிறப்பாக ஆடிய அவர் 96 பந்துகளுக்கு 11 பௌண் டரிகள் ஒரு சிக்ஸருடன் 81 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 43 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 219 ஓட்டங்களை எட்டியது. கொர்ரி அண்டர்ஸன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். அவர் பந்து வீச்சிலும் சிறந்து விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹமில்டனில் வரும் வியாழக்கிழமை நடை பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment