ஐக்கிய அரபு
ராச்சியத்தில் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கை
பெண்கள் கிரிக்கட் அணி நாளை (07) சார்ஜா நோக்கி பயணமாகவுள்ளது.
இலங்கை தேசிய பெண்கள் கிரிக்கட் அணியின்
இவ்வருடத்திற்கான முதலாவது போட்டியில் கலந்துகொள்ளவே இவ்வணி பயணமாகிறது.
இம்மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிக்கான கால அட்டவனைமுதலாவது நாள் ஆட்டம் - ஜனவரி 09
இரண்டாவது நாள் ஆட்டம் ஜனவரி 11
மூன்றாவது நாள் ஆட்டம் ஜனவரி 13
முதலாவது 20-20 ஆட்டம் ஜனவரி 15
இரண்டாவது 20-20 ஆட்டம் ஜனவரி 16
மூன்றாவது 20-20 ஆட்டம் ஜனவரி 17
எதிர்வரும் 18ஆம் திகதி கிரிக்கட் அணி இலங்கை திரும்பவுள்ளது.
0 Comments:
Post a Comment