2 Jan 2015

கல்முனை மாநகர சபை பிக்கப் வாகனம் விபத்து: அறுவர் காயம்

SHARE
கல்முனை மாநகர சபையின் பிக்கப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சபையின் பிரதம கணக்காளர் எச்.எம்.எம்.றசீட் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம், கந்தளாய் பிரதான வீதி வளைவொன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கணக்காளரும் சாரதியும் மேலும் நால்வரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கணக்காளர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் பேராதனை வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: