சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி தரிசனம் என்பதால்,
இதைக்கான நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரி மலையில்
குவிந்து உள்ளனர்.
பக்தர்கள் கார்த்திகை மாதம் சபரி மலைக்கு மாலை அணிந்து, 40
நாட்களுக்கும் மேல் விரதம் இருந்து, இந்த நாளில் வரும் மகர ஜோதியை
தரிசிப்பதற்காக சபரி மலைக்கு முன் கூட்டியே புறப்பட்டு செல்வார்கள்.
அண்ணாமலை கார்த்திகை தீபம் போன்று, சபரி மலை மகர ஜோதி புகழ்பெற்றது. மகர
ஜோதி தரிசனத்துக்காக சபரி மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து
உள்ளத்தால், கேரள அரசு ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.
மேலும், அங்கங்கு மருத்துவ முகாம்கள் அமைத்து பக்தர்கள் உடல் நலத்தில்
ஏதும் பாதிப்பு ஏற்படும்போது உடனடி சிகிச்சை அளிக்க ஏற்பாடு
செய்துள்ளதாகவும் கேரள அரசின் செய்திக்குறிப்பு மற்றும் கோயில் நிர்வாகம்
வெளியிட்டுள்ள தகவல் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment