13 Jan 2015

ஆப்கானிஸ்தானில் புதிய அமைச்சரவை நியமனம்

SHARE
ஆப்கானிஸ்தானின் அதிபராக அஷ்ரஃப் கனி பதவியேற்று மூன்று மாதங்கள் ஆன நிலையில் அங்கு புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

25 அமைச்சர்கள் கொண்ட மேற்படி அமைச்சரவையில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே நாட்டின் தேசிய வங்கி மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: