13 Jan 2015

உலக கிண்ணம் இந்திய அணிக்கு இல்லையாம்!

SHARE
14 அணிகள் பங்கேற்கும் 11-வது உலக கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் திகதி தொடங்குகிறது.

உலக கிண்ண போட்டியின் அணிகளின் நிலை குறித்து அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் முடிந்த இந்தியா - அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடருக்கு அமைக்கப்பட்ட ஆடுகளங்களுக்கும் (பிட்ச்), உலக கிண்ண போட்டிக்கு தயாரிக்கப்படும் ஆடுகளங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். கூடுதலாக பந்து பவுன்ஸ் (எகிறுதல்) ஆகும் வகையில் ஆடுகளம் அமைக்கப்படும் என்று நினைக்கிறேன். பவுன்ஸ் அதிக அளவில் இருக்கும் வகையில் பிட்ச் அமைப்பதில் அவுஸ்திரேலிய பிட்ச் பராமரிப்பாளர்கள் உலக அளவில் தலை சிறந்தவர்கள். அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலம் அளிக்கும் வகையில் பிட்ச்சை நிச்சயம் அளிப்பார்கள். இது அவுஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமையும்.

ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பவுன்ஸ் அதிகம் ஆகும் ஆடுகளங்களில் விளையாட தடுமாறுவார்கள். நடப்பு சாம்பியனான இந்திய அணி, உலக கிண்ண சாம்பியன் பட்டத்தை தங்க வைக்க முடியாது. இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்கா அல்லது இங்கிலாந்து அணியை சந்திக்கக்கூடும். இவ்வாறு டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: