13 Jan 2015

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம்

SHARE
மத்திய அரசின் அறிவிப்பால் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விரைவில் தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஓரிரு நாளில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் அறிவித்துள்ளார். எனவே விரைவில் ஜல்லிக்கட்டு மீதானதடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதுகுறித்து பரிசீலித்த மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி காட்சிப்பட்டியலில் இருந்து காளைகளை நீக்க முடிவு செய்துள்ளது. எனவே விரைவில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: