மட்.முதலைக்குடா
கனிஸ்ட வித்தியாலயத்தில் புதியதாக இணைந்து கொண்ட தரம் ஒன்று மாணவர்களை
வரவேற்கின்ற நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (19) வித்தியாலய அதிபர்
க.அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் எதிர்கால இலட்சிகளை அவர்களிடம் கேட்டறிந்து அதற்கேற்ற வகையில் பதவிநிலை உத்தியோகஸ்தர்கள் போல் அவர்களுக்குரிய உடைகளை அணிந்து, மாலை அணிவித்து அவர்களை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மட்.முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் கோகுலதீபன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சிவலிங்கம், மற்றும் கிராம நலன்விரும்பிகள், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment