16ம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை நாட்டைச்சேர்ந்த 3பேர்
உயிரிழந்ததாக அங்கிருக்கும் கல்ப் டைம் என்னும் பத்திரிக்கை
உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது இது குறித்து மேலும் தெரிய வருகையில் 6
பேர் பயணிக்கக்கூடிய சிறியரக வாகனமொன்றில் 4 பேர் பயணித்ததாகவும்
இதன்போது வாகன ஓட்டி அதிவேகப் பாதையில் வாகனத்தை அதிவேகமாக செலுத்தியதோடு
அதேவேகத்தில் வாகனத்தை திருப்ப முயன்ற போதே வாகனத்தின் முன் சக்கரம்
கட்டுப்பாடை இழந்து உடைந்ததோடு வாகனம் சாலையை விட்டு தடம்புரண்டதொடு
வகனத்திலிருக்கும் எரிபொருள் கொள்கலனில் வெடிப்பு ஏற்பட்டு எரிபொருளில்
தீப்பிடித்து வாகனம் முற்றாக எரிந்தது இதன்போது மூவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தனர் ஒருவர் உயிருக்குப் போராடும் நிலையில் ஹமாட் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மூவரும் பெரியநீலாவணையைச் சேர்ந்த . கலாமோகன் கஜானந்தன், தங்கராசா ரஜிப்கிருஷாந்தன், மற்றும் சின்னையன் கோபி என்ற மூன்று இளைஞர்களே விபத்தில் உயரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த மூன்று சடலங்களும் கட்டாரிலுள்ள ஹமாட் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன
விபத்தில் உயிரிழந்த இலங்கையர்கள் மூவரினதும் சடலங்களை நாளை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளனர்
0 Comments:
Post a Comment