SLIIT இன் நான்கு மாணவர்கள் இலங்கைக்கு பெருமை தேடித்தரும் வகையில்
அண்மையில் இடம்பெற்ற ஆசிய பசுபிக் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப
ஒன்றிணைவு (APICTA) விருதுகளில் உயர் விருதை வென்றிருந்தனர். இந்த
விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில்
இடம்பெற்றது. SLIIT இன் மாணவர்கள் தமது திறமைகளை பெருமளவு
வெளிக்காட்டியிருந்ததுடன், “யாலு: பயில்வதற்கான இயலாமையை மதிப்பிடும்
கட்டமைப்பு” என்பதற்கு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது.
வெற்றியீட்டிய நான்கு மாணவர்களில் சதுரிகா பிரபோதினி குலரத்ன, லெஷான் சதுரங்க குருப்புஆரச்சி, ஷசிக சந்தகெலும் விஜேகோன் மற்றும் மயோத்மான குலமினி வீரசிங்க ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இந்த அணியின் மேற்பார்வையை SLIIT இன் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. ரொஹான் சமரசிங்க மேற்கொண்டிருந்ததுடன், இணை மேற்பார்வை நடவடிக்கைகளை செல்வி. தக்ஷி தரங்கா மேற்கொண்டிருந்தார்.
இந்த வெற்றி தொடர்பில் கலாநிதி. சமரசிங்க கருத்து தெரிவிக்கையில், “APICTA நிகழ்வில் உயர் விருதை பெற்றுக் கொண்டமைக்கு மேலாக, எமது அணி கடந்த ஆண்டு இடம்பெற்ற தேசிய சிறந்த தரமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விருதுகள் வழங்கலில் தொலைதூர மாணவர் – தொழில்நுட்ப பிரிவில் தங்க விருதை சுவீகரித்திருந்தது. திறந்த மூல மென்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறந்த தீர்வுக்கான விருதையும் இந்த அணி பெற்றுக் கொண்டிருந்தது” என்றார்.
4 முதல் 6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் காணப்படும் பயிலல் இயலாமையை மதிப்பீடு செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆப்ளிகேஷனாக “யாலு” என்பது அமைந்துள்ளது. இந்த மதிப்பீட்டு கட்டமைப்பின் மூலமாக விளையாட்டை அடிப்படையாக கொண்டு நான்கு விதமான பயிலல் இயலாமைகளை கண்டறியும் முறைகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றில், Dyslexia, Dysgraphia, Dyscalculia மற்றும் Dyspraxia போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த கண்டறிதல் முறைகள் வாசித்தல், எழுதுதல், கணித ஆற்றல்கள் போன்றவற்றில் காணப்படும் குறைபாடுகளை இனங்காணும் வகையில் அமைந்துள்ளன.
APICTA என்பது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையை பொறுத்தமட்டில் பிராந்தியத்தில் காணப்படும் பெருமளவு வரவேற்பை பெற்ற விருது வழங்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.

0 Comments:
Post a Comment