2 Jan 2015

மைத்திரி பக்கம் சாய்ந்த மேலும் சில ஐ.ம.சு.மு உறுப்பினர்கள்

SHARE
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேலும் மூன்று பிரதேசசபை உறுப்பினர்கள் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்பாகமுவ பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் மற்றும் குருநாகல் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருமே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேடருவ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அபேவிக்ரம ஆகியோரும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: