பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) 2, 3 ஆம்
திகதிகளில் மாபெரும் பிரச்சாரக் கூட்டங்கள் அம்பாரை மாவட்டத்தில்
நடைபெறவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் கல்முனை மாநகர சபையின்
பிரதி முதல்வர் அப்துல் மஜீட் இன்று (02) தெரிவித்தார்.
இது விடயமாக அவர் குறிப்பிடும்போது,
இப்பிரச்சார பொதுக்கூட்டங்கள் இன்று (02) அக்கரைப்பற்று, பாலமுனை,
சம்மாந்துறை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களிலும், நாளை (03) சென்றல்
கேம்ப், இறக்காமம், அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலும்
நடைபெறவுள்ளது.
இக்கூட்டங்களுக்கு கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம்
அவர்கள் பிரதம பேச்சாளராகவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், அரசியல் கட்சிகள் சார்
உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.(ml)
0 Comments:
Post a Comment