
கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் 1960 களைச் சேர்ந்த பழைய மாணவர்கள் குழு ஏழாவது வருடாந்த நிகழ்வினை முன்னிட்டு ஏற்பாடு செய்தமையே இந்நிகழ்வாகும்.
இப்போட்டிகளில் கொழும்பிலுள்ள பிரபலமான 12 பாடசாலைகள் பங்குபற்றுகின்றன. அத்துடன் கிண்ணம், கோப்பை, குவளை என மூன்று பிரிவுகளில் இப்போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியினை முன்னின்று நடாத்தும் ஸாஹிரா கல்லூரியின் சார்பில் இரண்டு அணிகள் பங்குபற்றுகின்றன. எனவே 13 அணிகளும் முதலில் நான்கு குழுக்களாக லீக் அடிப்படையில் போட்டியிடவுள்ளன. நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கு அலைட் ட்ரேடிங் இன்டர்நஷனல் பிறைவேட் லிமிடெட் , பாயிஸ் பிரதர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment