11 Jan 2015

சிறுபான்மை மக்களின் வாக்குப் பலத்தால் ;ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது; சந்திரகாந்தன் வாழ்த்து

SHARE
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா ஜனநாயக சோஸலிஸக் குடியரசின் புதிய ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ள அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் திகாமடுல்ல 

பாராhளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு அவர்கள்.

எமது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களாகிய தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குப் பலத்தால் இன்று ;ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த கால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக அதனைமேலும் மேலும் ரணமாக்கியது.
இன்று ஆரம்பமாகின்ற மைத்திரி யுகத்தில் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரி;பால சிரிசேன அவர்களது ஆட்சியில் சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகள ஏற்கப்பட்டு அவர்கள் தங்களது உரிமைகளைப் பெற்று வாழ வழி வகுப்பதோடு, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைத்தல் முதலிய பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும்,

கடந்த கால அரசுகள் விட்ட தவறுகளைத் திருத்தி தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள தங்களது உரிமைகளைப் பெற்று; நிம்மதியாக வாழ்வதற்கும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் உதவும் என்றும் நம்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: