11 Jan 2015

நல்லாட்சிக்கான சமூக ஒற்றுமையை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு இதயத்து நன்றிகள்

SHARE
நாட்டை நேசிப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள் என்ற வர்க்கத்தினரைத் தவிர இந்த நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என்ற பாகுபாடு இல்லை என மக்களை நம்பவைக்கும் மாயப் பேச்சுக்களால் தமிழ் பேசும் மக்களைத் தாலாட்டிய ஆட்சிக்கு இன்று மக்களாலே முடிவு கட்டப்பட்டுள்ளது.

பேரினவாத கடும்போக்காளர்களின் செயற்பாட்டுக்கு போசனையிட்டு, ;ஊக்கப்படுத்தி, சிறுபான்மை மக்களின் உள்ளங்களை வேதனை செய்து, ஜனநாயக போர்வையால் மேற்கொள்ளப்பட்ட சர்வதிகார ஆட்சி 2015ஆம் ஆண்டில் நிறைவுக்கு வந்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் 9 வருட கால ஆட்சிக்கு பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளும் பெரும்பாலான தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளாலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் புறக்கணித்து, கடும்போக்காளர்களின் நெருக்குவாரங்களுக்கு முடிவு கட்டாமல் அவர்களை சுதந்திரமாக உலாவுவதற்கும் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுவதற்கும் சுதந்திரம் வழங்கி விட்டு அவர்களைக் கொண்டு பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஆட்சி பீடம் ஏற முடியுமென்;ற மமதையில் மிதந்த மகிந்த ராஜபக்ஷவின் 3வது தடவை ஆட்சிக்கனவு கலைந்து விட்டது.

ஆக, இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முன்னிட்டு உழைத்த பெரும்பான்மை மக்களோடு கைகோர்த்து நின்ற சிறுபான்மை மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசுக்கு நல்லதொரு வரலாற்றுப்பாடத்தைப் புகட்டியுள்ளதோடு. ஜனாதிபதி வேட்பாளர் மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் பெரு வெற்றி சிறுபான்மை மக்களுக்குக் கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.

அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இலங்கைத் திருநாட்டின் 7வது ஜனாதிபதியாக வெற்றி மாலை சூடியுள்ள மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் நல்லாட்சிக்கான மாற்றத்திற்காக வாக்களித்த உலமா பெருந்தகைகள், தாய்மார்கள,; சகோதர சகோதரிகள் இளைஞர்கள் என அத்தனை உறவுகளுக்கும் எனது இதயத்து நன்றிப் பூக்களைச் சொறிகின்றேன்.
அத்தோடு, இனிவரும் காலங்களிலும் பிரிவினைகளை மறந்து, சமூக ஒற்றுமையை கட்டிக்காத்து, நமது அத்தனை உரிமைகளையும் பெற்று சகல இன மக்களுடனும் புரிந்துணர்வுடன் வாழவும,; சாந்தி சமாதானத்தைக் கட்டியெழுப்பவும், உங்களோடு ஒன்றிணைந்து செயற்படவும் இப்பிரதேச மக்களின் வாழ்வதார அபிவிருத்தி முதல் அத்தனை செயற்பாடுகளிலும் பங்குகொள்ளவும் எனது எதிர்கால அரசியல் பயணத்தில் உங்களையும் பங்காளிகளாக இணைத்து கொண்டு பயணிக்க வல்ல அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள்புரிவானாக. ஆமீன்
மக்கள் பணியில், உங்களுடன் என்றும்
அன்புடன்

அல் -ஹாஜ் ஆரிப் சம்சுடீன்
சட்டத்தரணி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
SHARE

Author: verified_user

0 Comments: