இலங்கை சனநாயகச் சோசலிசக் குடியரசின் 7வது ஜனாதிபதி பதியைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புக்கள் இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மிகவும் சுமுகமான நிலையில் ஆரம்பமாகியது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாக்களிப்புக்கள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது,
இன்று பி.ப 4 மணியுடன் வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமாகவும், வாக்கெண்ணும் நிலையமாகவும் காணப்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும்,
மாவட்டத்திலுள்ள 414 வாக்களிப்பு நிலையங்களிலிருந்தும், பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 365163 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 172497 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 105055 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 87611 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்களும், பலப்படுத்தப் பட்டுள்ளதையும், அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment