ஜனாதிபதி
தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று 07ஆம்
திகதி முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை
வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி
அமைச்சு தெரிவித்தது.
இதேவேளை, புனித பாப்பரசரின் வருகையையொட்டி
பாதுகாப்பு கடமைகளுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின்
தங்குமிட வசதி கருதி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் ஜனவரி 11ம் திகதி முதல்
15ம் திகதி வரையில் மூடப்பட்டு பின்னர் 16ம் திகதியன்று கல்வி
நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்தது.
புனித பாப்பரசரின் வருகையையொட்டி இந்தத் தினங்களில் றோயல் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பெண்கள் வித்தியாலயம், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, சென். ஜோசப்ஸ் ஆண்கள் வித்தியாலயம், கிரேண்ட்பாஸ் சென்.அந்தனிஸ் வித்தியாலயம், அல் அஸார் வித்தியாலயம், புளுமெண்டல் தமிழ் வித்தியாலயம், மருதானை ஆனந்தாக் கல்லூரி, அசோக்கா வித்தியாலயம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள 43 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
இதேவேளை, க.பொ.த. சாதாணதரப் பரீட்சை விடைதாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் 83 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.(nl)

0 Comments:
Post a Comment