7 Jan 2015

தேர்தலுக்கு சாதகமான சூழ்நிலை

SHARE
2015- ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலை காணப்படுவதாக  தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அம்மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அந்நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஷ்சந்திர தெரிவித்தார்.

இவ்வாறான சூழ்நிலையை ஏற்படுத்த தேர்தல் ஆணையாளர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர் இதன் போது நன்றியை தெரிவித்தார்.கடந்த சில நாட்களாக தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பின்னர் படிப்படியாக குறைந்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான மேலதிக அறிக்கையை முன்வைத்த சட்டத்தரணி சந்திரசிறி டி சில்வா கருத்து தெரிவிக்கையில் நீதியும் நேர்மையுமானதொரு தேர்தலை நடத்துவதற்கும் வாக்காளர்கள் எவ்வித பயமும் சந்தேகமும் இல்லாமல் வாக்குகளை பயன்படுத்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதும் தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.

கண்காணிப்பு அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ஸ்ரீ ஜயவர்தபுர- களனி - மற்றும் கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்கள் அறிக்கை தயாரித்துள்ளன என்றும் கொழும்பு பல்கலைக்கழக அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.(nl)

SHARE

Author: verified_user

0 Comments: