10 Jan 2015

தமிழன் ஒற்றுமையாக இன்றும் வாழ்கின்றான் என்பதை பறைசாற்றியுள்ளனர்.

SHARE
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே எதிரணி பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி பால சிறிசேன அவர்களுக்கு  6217162 வாக்குகளை அளித்து  51.35% வாக்கு வீதத்தினைப் பெற்று நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  09.01.2015 அன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.


வடக்கு கிழக்கு மக்களின் தேர்தல்  தொகுதிகளிலே மைத்திரி பால சிறிசேன அவர்கள் அதிகளவான வாக்கு வித்தியாசத்தி ல் வெற்றி பெற்றுள்ளமையை அறிய முடிகின்றது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில்  மைத்திரிபால சிறிசேன அவர்கள் 12 மாவட்டங்களில்  வெற்றிபெற்றுள்ளார். அதில் 05 மாவட்டங்கள் தமிழர் அதிகளவு செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பகுதியாகும். யாழ்ப்பாண மாவட்டத்திலே 253574 வாக்குகளையும் வன்னி மாவட்டத்திலே 141417 வாக்குகளையும் திருகோணமலையில் 140338 வாக்குகளையும் மட்டக்களப்பில் 209422  திகாமடுல்ல மாவட்டத்திலே 233360 பெற்றுள்ளார். மொத்தமாக 978111 வாக்குகளை வடகிழக்கிலே இருந்து மைத்திரி பால சிறிசேன பெற்றுக்கொண்டுள்ளார். மஹிநத ராஜபக்ஸ அவர்களை மைத்திரிபால சிறிசேன அவர்கள் மொத்தமாக 449072 வாக்குகளாலே வெற்றி பெற்றுள்ளார்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆகியோர் தமிழி முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்று பிரச்சாரங்கள் மேற்கொண்டமை நாடறிந்த உண்மையாகும்.   தமிழன் இன்றும் தன் மானத்துடன் தான் வாழ்கின்றான் என்பதை அவர்கள் அறியவில்லை. 

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே மைத்திரிபால சிறிசேன அவர்கள் 978111 வாக்குகளையும் மஹிந்த ராஜகக்ஸ அவர்கள் 323600 வாக்குகளையும் பெற்று 6545111 வாக்கு வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாக்களிப்பு ஒரு உணர்ச்சி பூர்வமான வாக்களிப்பாக காணமுடிகின்றது. மாற்றம் வேண்டியே இவ்வாக்களிப்பு நடைபெற்றமையை இதிலிருந்து அறிய முடிகின்றது.  

எதுஎவ்வாறாயினும் 09.01.2015 அன்று மாலை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற பதவியேற்றபின் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சந்திரிகா சரத்பொன்சேகா ரணில் விக்கரமசிங்க ஹக்கீம் றிசாட் மற்றும் பலருக்கு நன்றி கூறிய போது  தமிழ் மக்கள் சார்பாக யாருக்கும் நன்றி தெரிவிக்காமை குறித்து தமிழ் மக்களின் மனதில்பெரும் குழப்பதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பதவியேற்பிற்கு இரா.சம்பந்தன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



-திலக்ஸ் ரெட்ணம்-





SHARE

Author: verified_user

0 Comments: