ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று புதன் கிழமை (07) அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் மட்.இந்துக் கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் 414 வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 172497 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 105055 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 87611 பேருமாக மொத்தம் மட்டக்களப்பு மாவடத்தில் 365163 பேர் இம்முiறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளததையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment