5 Jan 2015

13 அடி நீளமுள்ள மலைப்பாம்புடன் 14 மாதக் குழந்தையை விளையாட வைத்த தந்தை…!!

SHARE
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது 14 மாதக் குழந்தையை 13 அடி நீளமான மலைப்பாம்புடன் விளையாட விட்டதுடன் அக்காட்சியை படம்பிடித்து இணையத்திலும் வெளியிட்டுள்ளார்.

மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜெமி குவாரினோ எனும் நபரே தனது 14 மாத மகளான அலிஸா குவாரினோவை இவ்வாறு பாம்புடன் விளையாட அனுமதித்துள்ளார். 

அம்பாம்புகள் பாதுகாப்பானவை என்பதை நிரூபிப்பதற்காக தான் இவ்வாறு செய்ததாக 34 வயதான ஜெமி தெரிவித்துள்ளார். 

ஆனால், சிலர் இந்நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். பெரியவர்களில் ஒருவர் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தால் அக்குழந்தை பாதுகாப்பாக இருந்திருக்கும்.

ஆனால், குழந்தையை தனியாக பாம்புடனோ, நாயுடனோ விட்டுச் செல்வது ஆபத்தானது என ஒருவர் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: