20 Jan 2015

கிழக்கு மாகாண சபை பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

SHARE
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று (20.01.2015) காலை சபையின் தவிசாளர் தலைமையில் கிழக்கு மாகாண சபையின் அமர்வு நடைபெற்றது. 

சபையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே இடம்பெற்ற விவாதங்களினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டமையினாலும் சபையை தொடர்ந்து சபையின் அமர்வு பெப்ரவரி மாதம் 10ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் காரணமாக கிழக்கு மாகாண சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றும் நிறைவேற்ற முடியாமல் போனது. எனினும் இன்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது கிழக்கு மாகாணசபையில் ஆளும் தரப்பினர் மற்றும் எதிர்த்தரப்பினரிடையே தமது பலத்தினை வெளிப்படுத்த முடியாத உறுதியான தன்மை இன்னும் ஏற்படாமை காரணமாக குறித்த பலத்தினை வெளிப்படுத்தி அதனூடாக வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவது ஆரோக்கியமானதாக அமையும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதற்கிணங்க சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி வரை ஒத்தி வைப்பதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனினும்  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பதனை தொடர்ந்து அதன் கீழ் கடமையாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களின் இம்மாத கொடுப்பனவை வழங்குவதற்கான விசேட ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பணித்ததிற்கு இணங்க குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட ஏற்பாடாகியுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: