15 Jan 2015

ஏறாவூரில் 100 உலருணவுப் பொதிகள் கைப்பற்றப்பட்டன!

SHARE
ஏ.எச்.ஏ. குஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரில் பொதி செய்யப்பட்ட நிலையில் வீடொன்றுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 உலருணவுப் பொதிகளைத் தாம் கைப்பற்றியிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த உலருணவுப் பொதிகளில் அரிசி, பருப்பு, பால் மா, சீனி உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை (14) அதிகாலை இந்த உணவுப் பொதிகளைத் தாம் கைப்பற்றியதாகவும் அது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.

சமீபத்திய சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உலருணவுப் பொதிகளை விநியோகித்திருந்தன.

அவ்வாறு மக்களுக்கு விநியோகிப்பதற்கென கொண்டுவரப்பட்ட உலருணவுப் பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாக பொலிஸார் மேலும் கூறினர்.

SHARE

Author: verified_user

0 Comments: