16 Jan 2015

டில்ஷானின் சதத்துடன் இலங்கையணி போட்டியில் 06 விக்கெட்டுக்களால் வெற்றி

SHARE
இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 07 சர்வதேச ஒரு நாள் போட்டிகளை கொண்ட இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கையணி 06 விக்கெட்டுக்களால் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையணியின் சார்பில் திலகரட்ண டில்ஷான் 116 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கையணி முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 07 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகின்றது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை தம் வசமாக்கியது. இதனையடுத்து இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒரு நாள் போட்டி கடந்த 11 ஆம் திகதி கிறிஸ்ட் சேர்ச்சில் இடம்பெற்றது. இதிலும் நியூசிலாந்து அணி 03 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கியது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று 15 ஆம் திகதி கெமில்டன் சீடன் அரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி நியூசிலாந்து அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 248 ஓட்டங்க​ளைப் பெற்றனர். நியூசிலாந்து அணியின் சார்பில் மக்கெலம் 116 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கையணியின் சார்பில் ஹேரத் 36 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

249 இனை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கையணியின் சார்பில் திலகரட்ண டில்ஷான் சதமெடுத்துடன் அணியின் தலைவர் மத்யூஸ் இன் பொறுமையான ஆட்டத்தின் மூலம் 47.4 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை எட்டியது.

இதன் மூலம் இலங்கையணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 01- 01 என்ற ரீதியில் சமப்படுத்தியுள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: