20 Dec 2014

கொட்டும் மழையிலும் மைத்திரியை ஆதரித்து நிந்தவூரில் பிரச்சாரக் கூட்டம்

SHARE
ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (19) நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்றது.
நிந்தவூர் பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.எம்.எம்.றிபாக் தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான எஸ்.எஸ்.பி.அப்துல் மஜீட், அம்பாரை பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள, ஐ.தே.கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் அஸ்வான் மௌலானா, ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் ஹசன் அலி உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையிலும், இருளிலும் கூட மக்கள் களைந்து செல்லாமல் கூட்டத்தில் கலந்து கொண்டதை காணக் கூடியதாக இருந்தது.

SHARE

Author: verified_user

0 Comments: