குண்டான பெண்களுக்கான மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டி ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
தென்னமேரிக்காவில் உள்ள இரட்டை தீவு நாடான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவில் வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டி நடக்க உள்ளது. முன்னதாக மிஸ் பிளஸ் கரீபியன் பிரபஞ்ச அழகி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டி தற்போது உலக அளவில் நடத்தப்படுகிறது.
ஜனவரியில் குண்டுப் பெண்களுக்கான உலக அழகிப் போட்டி இந்த போட்டியில்
பல்வேறு நாடுகளை சேர்ந்த குண்டான அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அழகு
என்பது உடலின் சைஸில் இல்லை என்பதை எடுத்துக் கூறுவது தான் இந்த போட்டியின்
குறிக்கோள் ஆகும். வெளி அழகு முக்கியம் அல்ல மன அழகே அழகு என்பதை இந்த
போட்டி தெரிவிக்கிறது.
மிஸ் பிளஸ் சைஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் நீச்சல் உடை, பார்ட்டி உடை,
கேள்வி பதில் மற்றும் திறமை சோதனை ஆகிய சுற்றுகள் உள்ளன. இந்த போட்டியில்
வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசு, அழகு குறித்து ஓராண்டு படிக்க
புலமைப்பரிசில், மாடலாக இருக்க ஒப்பந்தம், கரீபியின் தீவில் தங்களுக்கு
பிடித்த இடத்திற்கு செல்ல டிக்கெட் மற்றும் பிற பரிசுகள் அளிக்கப்படும்.
குண்டான அழகிகளுக்கான போட்டி கடந்த 2012ம் ஆண்டு பேர்ல் வில்லியம்ஸ்
என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த போட்டி மிகவும் பிரபலமாகி வருகின்றபோதிலும்
போதிய அனுசரணையாளர்கள் இல்லை என்று வில்லியம்ஸ் தெரிவித்தார்.(ad)

0 Comments:
Post a Comment