19 Dec 2014

திருமலையில் கிரீடா சக்தி மூலம் வீர வீராங்கனைகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

SHARE
திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் திறமை காட்டிய 95 வீர வீராங்கனைகளுக்கு கிரீடா சக்தி திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் வைபவம் இன்று (19.12.2014) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதற்காக தெரிவுசெய்யப்பட்ட 95 பேரிற்கும் 3,80,000 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் விளையாட்டு செயற்பாட்டுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வீர வீராங்கனைகளுக்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.

2014ம் ஆண்டு திருகோணமலை மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக 9.3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக திருமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.விஜயனீதன் தெரிவித்தார்.

இவற்றுள் 8.2 மில்லியன் ரூபா விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பதற்காகவும் 1.1 மில்லியன் ரூபா பயிற்சி முகாம்கள் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துதல் மற்றும் ஊக்குவிப்பு சார்ந்த செயற்பாடுகளிற்காக செலவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மேஜர் ஜெனரல் ரி.திஸ்ஸ ரஞ்சித் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த அரச உத்தியோகத்தரும் முன்னாள் மூதூர் பிரதேச செயலாளருமான என்.பிரதீபன், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் உட்பட வீர வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: