19 Dec 2014

கெவுளியாமடு சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மங்களகம, மற்றும் கெவுளியாமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினைத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சிங்கள பொதுமகள் இன்று வெள்ளிக் கிழமை (19) மாலை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் முன் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் பதாகைகளை ஏந்தியவாறு அமைத்தியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தமக்குரிய அடிப்படை வசத்திகள் இதுவரையில் ஏற்படுத்தித் தரவில்லை, எனவே மட்டக்களப்பக்கு வருகைதரும் ஜனாதிபதியை தாம் நேரில் சந்தித்து தமது பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றிக்  கதைக்க வேண்டும் எனத் தெரிவித்தே தாம் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈபடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


இறுதியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்வில் இவ்வார்ப்பாட்டக் காரர்கள் கலந்து கொண்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: