18 Dec 2014

குடிநீர் விநியோகத்துக்கான வேலைத்திட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில்  குடிநீர் விநியோகத்துக்கான வேலைத்திட்டம் புதன்கிழமை (17) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கோடை காலத்தில் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கிணறுகளில் நீர் வற்றுவதால், இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.  இந்த நிலையில், வவுணதீவு பிரதேசத்திலுள்ள பிரதான நீர்வழங்கல் நிலையத்திலிருந்து பட்டிப்பளை பிரதேசத்துக்கு குடிநீர் விநியோகத்திட்டம் இணைக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்துக்காக சுமார் 800 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம்  எதிர்வரும் மே மாதம் பூர்த்திசெய்யப்படும். இதனால், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 24 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த  மக்கள் நன்மையடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த குடிநீர் விநியோக வேலைத்திடடம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் விநோதன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: