24 Apr 2026

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் 5 மில்லியன் செலவில் 277 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் பணி ஆரம்பம்.

SHARE

களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் 5 மில்லியன் செலவில் 277 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் பணி ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதி வருடாந்தம் மழை காலங்களில் முற்றாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அவ்வீதியயைப் பயன்படுத்தும், பாடசாலை மாணவர்கள், உள்ளிட்ட பலரும் அக்காலத்தில் மிகுந்த இன்னல்களை எதிர் கொண்டு வருவது வழங்கமாகவுள்ளது.

இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய கிழக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 277 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை(24.04.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வீதிக்கு வடிகான் அமைக்கப்படுவதனால் இனிவரும் மழை வெள்ளகாலத்தில் இவ்வீதியைப் பயன்படுத்தம் அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் சிரமமின்றிப் பயணம் செய்ய முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த வடிகான் அமைக்கும் அங்குரார்பண இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




 

SHARE

Author: verified_user

0 Comments: