17 Dec 2014

மட்டு நகர் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம்

SHARE
ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல் சுமுகமாகவும் நீதியானதாகவும் நடைபெற்று முடிவதற்கு சகல வழிகளிலும் திறமையுடன் செயற்பட வேண்டும்' என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகக் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவுறுத்தல் கூட்டம் இன்று (16) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.  இந்த அறிவுறுத்தல் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், மாவட்ட செயலகத்தில் இயங்கும் பிரதான முறைப்பாட்டு அலுவலகத்தினைத் தவிர மேலும் இரண்டு முறைப்பாட்டு அலுவலகங்கள் களுவாஞ்சிக்குடி, வாழைச்
சேனை ஆகிய இடங்களிலும், இணைப்பு அலுவலகங்கள் பிரதேச செயலகங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இன்றைய கூட்டத்தில தேர்தல் கடமைகளிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், போக்குவரத்து, வாக்குப் பெட்டி விநியோகம், வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துவருதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் செயற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இன்றைய கூட்டத்தில், உதவித் தெரிவத்தாட்சிஅலுவலர்களாகக் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.(nl)
 
SHARE

Author: verified_user

0 Comments: